விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.2019 பிப்ரவரியில் இருந்து ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.ரோஷினி ஹரிப்ரியன் இந்த தொடரின் நாயகியாக நடித்துள்ளார்.அருண் பிரசாத் இந்த தொடரில் ஹீரோவாக நடித்துள்ளார்.ரூபா ஸ்ரீ,அகில்,கண்மணி மனோகரன்,காவ்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த தொடர் விறுவிறுப்பாக தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.இந்த தொடரை வைத்து குறிப்பாக கண்ணம்மா நடப்பது செம வைரலாக இருந்தது.தற்போதும் இந்த தொடருக்கான மவுசு குறையாமல் தொடர்ந்து TRP-யில் முதல் ஐந்து இடங்களுக்குள் வந்து அசத்தி வந்தது.இந்த தொடரில் முக்கிய வில்லி கதாபாத்திரத்தில் பாரினா அசாத் நடித்து வருகிறார்.

பிரபல தொகுப்பாளராக இருந்து பின்னர் பல முன்னணி சேனல்களின் சீரியல்களில் பணிபுரிந்த இவர் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்த பிறகு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையும் பெற்றிருந்தார்.வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வரும் இவர் இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருப்பார்.

அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார் பாரினா.நேற்று ரசிகர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார் பாரினா,.அதில் ரசிகர் ஒருவர் வரம்பு மீறி கேள்விகேட்க அவருக்கும் தகுந்த பதிலடி கொடுப்பது போல பாரினா பதிலளித்துள்ளார்.இவரது இந்த சரியான பதிலடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

bharathi kannamma farina azad slipper shot reply to fan indecent question

 

bharathi kannamma farina azad slipper shot reply to fan indecent question