இன்ஸ்டாகிராமில் பட்டையை கிளப்பும் சாதனையை செய்த பூஜா ஹெக்டே !
By Aravind Selvam | Galatta | August 25, 2021 12:24 PM IST
2012-ல் மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவான முகமூடி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.ஹீரோயின் ஆவதற்கு முன் 2010-ல் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் பங்கேற்று இரண்டாவது இடத்தை பிடித்திருந்தார்.தமிழின் முதல் சூப்பர்ஹீரோ படமாக முகமூடி உருவானது.பெரும் எதிர்பார்ப்புக்கிடையே உருவான முகமூடி படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் பூஜாவிற்கு தமிழில் வாய்ப்புகள் குறைந்தன.
இதனையடுத்து தெலுங்கு,ஹிந்தி மொழிகளில் நடிக்கத்தொடங்கினார் பூஜா.ஹ்ரித்திக் ரோஷனின் மொஹஞ்சதாரோ படத்தில் ஹீரோயினாக நடித்த இவர் , பல ரசிகர்களை பெற்றார்.தெலுங்கில் இவர் நடித்த படங்கள் ஹிட் அடிக்க ராசியான நடிகையாக மாறினார் பூஜா ஹெக்டே.ஜூனியர் NTR,அல்லு அர்ஜுன்,மகேஷ் பாபு என்று வரிசையாக பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துவிட்டார் பூஜா.
கடைசியாக இவர் ஹீரோயினாக நடித்த Alavaikunthapuramuloo பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது.இந்த படத்தை தொடர்ந்து இவர் பிரபாஸுடன் நடித்துள்ள ராதே ஷியாம் படம் 14 ஜனவரி 2022-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை அடுத்து Most Eligible Bachelor,ஆச்சார்யா,SSMB 28,Beast உள்ளிட்ட படங்களில் விறுவிறுப்பாக முக்கிய படங்களில் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் பூஜா தனது புகைப்படங்கள் வீடியோக்கள் பட அப்டேட்கள் என்று ஏதேனும் ஒன்றை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.தற்போது இன்ஸ்டாகிராமில் 15 மில்லியன் ரசிகர்களை பெற்று அதிகம் பின்தொடரப்பட்ட தென்னிந்திய நடிகைகளில் ஒருவராக அவதரித்துள்ளார் பூஜா ஹெக்டே.
Mirchi Shiva's horror comedy IDIOT release plans announced - OFFICIAL STATEMENT!
03/09/2021 08:40 PM