டிஸ்கவரி தொலைக்காட்சியின் பிரபலமான தொடர்களில் ஒன்று மேன் வெர்சஸ் வைல்ட்.இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் க்ரில்ஸ் உலகளவில் மிகவும் பிரபலமானவர்.காட்டுக்குள் தனியாக சுற்றித்திரியும் இவரது ஷோ மிகவும் வைரலானது.

Bear Grylls About Rajinikanth

கடந்த வருடம் இவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் நடத்திய மேன் வெர்சஸ் வைல்ட் சிறப்பு தொகுப்பு பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார்.இந்த படப்பிடிப்பு நேற்று நடைபெற்றது.

Bear Grylls About Rajinikanth

ஷூட்டிங்கிற்கு பிறகு ட்விட்டரில் பதிவிட்ட பியர் கிரில்ஸ் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதல்முறையாக டிவியில் தன்னுடைய நிகழ்ச்சியில் பங்கேற்பது மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.மேலும் ரஜினிக்கு நிகழ்ச்சியில் பங்கேற்கும் போது காயமாகிவிட்டது என்று சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தன.இதற்கு ஷூட்டிங்கை முடித்துவிட்டு திரும்பிய ரஜினி தனது அடியேதும் படவில்லை என்றும் முட்கள் அங்கங்கு குத்தியதாகவும் தெரிவித்தார்.இந்த தொடர் விரைவில் ஒளிபரப்பாகும் என்று தெரிகிறது.