அறிமுக இயக்குனர் பரத் கம்மா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா காம்பினேசனில் உருவாகிய படம் டியர் காம்ரேட். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகிய இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

வீட்டில் சைத்தன்யாவாகவும் சமுதாயத்தில் பொறுப்புடன் இருக்கும் காம்ரேட் பாபியாகவும் கச்சிதமாக பொருந்தியுள்ளார் நாயகன் விஜய்தேவரகொண்டா. விஜய் தேவரகொண்டாவிற்கென இருக்கும் வசீகர தன்மை ஃபிரேம் முழுவதும் நிரம்பி வழிகிறது. எச்செயல் செய்தாலும் அதை ஈர்க்கும் வண்ணம் செய்வது அவரது திறமை. காம்ரேட் பாபியாக வரும் நாயகன், நாயகி லில்லியுடன் காதலில் விழுந்து பின் நாயகி சந்திக்கும் பிரச்சனைக்கு எப்படி தீர்வு காண்கிறார், காதலுக்காக தன்னை எப்படி மாற்றிக்கொள்கிறார் என்பதே இந்த டியர் காம்ரேட் படத்தின் கதைச்சுருக்கம்.

தற்போது அழைப்பாயா பாடலின் வீடியோ வெளியானது. ஜஸ்டின் பிரபாகரன் இந்த பாடலை பாடியுள்ளார்.