இந்திய திரையுலகில் தாகம் தீரா கலைஞனாக திகழ்பவர் நடிகர் தனுஷ். பட்டாஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜுடன் கர்ணன் படத்தில் பணிபுரிந்து முடித்துள்ளார் தனுஷ். மேலும் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கவிருக்கும் புதிய படத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார். 

atrangire

கடந்த 2013-ம் ஆண்டு ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ராஞ்சனா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்தார் தனுஷ். பிறகு பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சனுடன் ஷமிதாப் என்ற படத்தில் நடித்தார். தற்போது மீண்டும் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் அத்ரங்கி ரே படத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் தனுஷுடன் அக்‌ஷைகுமார் மற்றும் சாரா அலிகான் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். 

atrangire atrangire

ஹிமான்ஷு ஷர்மா கதை எழுதியுள்ளார். சமீபத்தில் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு வாரணாசியில் இன்று துவங்கியது. 2021 பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று இந்த படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.