ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்தவர் அட்லீ.இதனை தொடர்ந்து இவர் தளபதி விஜயுடன் இணைந்து தெறி,மெர்சல் என்று பிரம்மாண்ட வெற்றி படங்களை கொடுத்திருந்தார்.

Atlee SRK Movie Shoot to Begin From March 2020

இதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான பிகில் படம் ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிநடைபோட்டு வருகிறது.இதனை தொடர்ந்து பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கானை அட்லீ இயக்கவுள்ளார்.

Atlee SRK Movie Shoot to Begin From March 2020

இந்த படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று தற்போது கிடைத்துள்ளது.இந்த படத்தின் ஷூட்டிங் 2020 மார்ச் மாதம் முதல் தொடங்கும் என்று தகவல் கிடைத்துள்ளது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

Atlee SRK Movie Shoot to Begin From March 2020