தமிழ் சினிமா ரசிகர்களிடம் தனது வித்தியாசமான கதைத்தேர்வின் மூலம் நல்ல நடிகராக உருவெடுத்துள்ளவர் அதர்வா.கடைசியாக 2019-ல் இவர் நடித்த 100 படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.இதனை தொடர்ந்து ஜிகர்தண்டா தெலுங்கு ரீமேக்கில் சித்தார்த் நடித்த வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததது.

இவர் நடிப்பில் உருவாகியுள்ள குருதி ஆட்டம்,ஒத்தைக்கு ஒத்த உள்ளிட்ட படங்களின் ரிலீஸ் சில காரணங்களால் தள்ளிப்போனது.இதனை அடுத்து தள்ளிபோகாதே, படத்தில் நடித்து வந்தார்.8 தோட்டாக்கள் படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கும் குருதி ஆட்டம் படத்தில் அதர்வா ஹீரோவாக நடித்துள்ளார்.

ராக்போர்ட் என்டேர்டைன்மெண்ட் டி.முருகானந்தம் இந்த படத்தை தயாரித்துள்ளார்.ப்ரியா பவானி ஷங்கர் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார்.ராதிகா,ராதாரவி உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ரிலீஸ் சில காரணங்களால் தள்ளிப்போனது.இந்த படத்தின் டப்பிங் வேலைகளை தற்போது படத்தின் படத்தின் நாயகன் அதர்வா முடித்துள்ளார் என்ற தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த படத்தின் டீஸர்,ட்ரைலர் மற்றும் ரிலீஸ் தேதி போன்றவை விரைவில் அறிவிக்கப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.