தமிழ் சினிமா ரசிகர்களிடம் தனது வித்தியாசமான கதைத்தேர்வின் மூலம் நல்ல நடிகராக உருவெடுத்துள்ளவர் அதர்வா.8 தோட்டாக்கள் படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கும் குருதி ஆட்டம் படத்தில் அதர்வா ஹீரோவாக நடித்துள்ளார்.

Atharvaa Kuruthi Aattam Shoot Wrapped PriyaBhavani

ராக்போர்ட் என்டேர்டைன்மெண்ட் டி.முருகானந்தம் இந்த படத்தை தயாரித்துள்ளார்.ப்ரியா பவானி ஷங்கர் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார்.ராதிகா,ராதாரவி உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Atharvaa Kuruthi Aattam Shoot Wrapped PriyaBhavani

யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது முடிவடைந்துள்ளது என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.