வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் அசுரன்.கலைப்புலி தாணு இந்த படத்தை தயாரித்திருந்தார்.ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

Asuran Telugu Remake Narappa Priyamani Look
இந்த படம் தெலுங்கில் Narappa என்ற பெயரில் ரீமேக்காகி வருகிறது.வெங்கடேஷ் இந்த படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார்.ப்ரியாமணி இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துவருகிறார்.இந்த படத்தை சுரேஷ் ப்ரொடுக்ஷன்ஸ் தயாரிக்க கலைப்புலி தாணு இணைந்து வழங்குகிறார்.

Asuran Telugu Remake Narappa Priyamani Look

ஸ்ரீகாந்த் அடாலா இந்த படத்தை இயக்குகிறார்.மணி சர்மா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இன்று படத்தின் நாயகி ப்ரியாமணியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.