அசுரன் படத்தின் முதல் பாடல் குறித்த ருசிகர தகவல்
By Sakthi Priyan | Galatta | August 15, 2019 14:09 PM IST

தமிழ் சினிமாவின் பல வெற்றி படைப்புகள் தந்த வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கிறார். இப்படத்திற்கு அசுரன் என பெயரிடப்பட்டுள்ளது. கலைப்புலி S தாணு இப்படத்தை தயாரிக்கிறார். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை போன்ற படங்களுக்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் உடன் தனுஷ் இணைகிறார்.
தனுஷ் இரட்டை வேடமிட்டு நடிக்கும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். மேலும் படத்தில் நடிகர் கருணாஸ் மகன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் என்பது நாம் அறிந்தவையே.
படப்பிடிப்பு பணிகளை முடித்து போஸ்ட் ப்ரோடக்ஷனில் கவனம் செலுத்த உள்ளனர். ரெகார்டிங் முடிந்து பாடல்கள் தயார் நிலையில் உள்ளது என இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் சமீபத்தில் பதிவு செய்திருந்தார்.
அக்டோபர் 4-ம் தேதி ரிலீஸாக உள்ளதால் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர் தனுஷ் ரசிகர்கள். தற்போது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் முதல் சிங்கிள் விரைவில் வரும் என பதிவு செய்துள்ளார்.