போலீசார் தாக்கியதில் கரு கலைந்ததாகவும், 3 பெண்களை நிர்வாணப்படுத்தி போலீசார் மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.

அசாம் மாநிலம் தர்ராங் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண், அந்த ஊரில் உள்ள போலீசாருக்கு எதிராகப் பரபரப்பான குற்றச்சாட்டைக் கூறியுள்ளார். அதன்படி, “கடந்த 8 ஆம் தேதி எங்கள் வீட்டிற்கு வந்த போலீசார், என் மூத்த சகோதரர் இருக்கும் இடம் கேட்டு, என்னையும் என் 2 சகோதரிகளையும் பூட்ஸ் காலில் உதைத்து, லத்தியால் எங்களை அடித்து போலீசார் துன்புறுத்தினார்கள்.

women abortion

பின்னர், விசாரணை என்ற பெயரில் என்னையும், என் 2 சகோதரிகளையும் புஹாரா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், அங்கே எங்கள் 3 பேரையும் நிர்வாணப்படுத்தி, கடுமையாகத் தாக்கினர். இந்த விசாரணை, தாக்குதல் தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தால், கொன்றுவிடுவோம் என்று துப்பாக்கியைக் காட்டி எங்களை மிரட்டினர்.

women abortion

இந்த தாக்குதலில் என் கர்ப்பிணி சகோதரிக்கு 'கரு' கலைந்துவிட்டது. அதன்பிறகே, கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்த போலீசார், எங்களையும் விடுவித்தனர்” என்று போலீசார் மீது பரபரப்பாகக் குற்றம்சாட்டி உள்ளார்.

women abortion

இந்த குற்றச்சாட்டு அசாம் மாநிலத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்த அம்மாநில முதலமைச்சர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

women abortion

இதனிடையே, அசாமில் 3 பெண்களை நிர்வாணப்படுத்தி, போலீசார் தாக்கியதில், பெண்ணுக்குக் கரு கலைந்த விவகாரம் அம்மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.