தென்னிந்தியாவின் பிரபல தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Trident Arts.தங்கள் அடுத்த தயாரிப்பான என்ன சொல்ல போகிறாய் படத்தினை சமீபத்தில் அறிவித்தனர்.குக் வித் கோமாளி தொடரின் மூலம் தமிழக இதயங்களை கொள்ளைகொண்டு பிரபலமான அஷ்வின் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

இப்படத்தை இயக்குநர் ஹரிஹரன்  A இயக்குகிறார்.இந்த படத்தில் குக் வித் கோமாளி தொடரில் பிரபலமான புகழ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.விவேக் மெர்வின் இந்த படத்திற்கு இசையமைக்கின்றனர்.இந்த படத்தில் தேஜு அஷ்வினி மற்றும் அவந்திகா இருவரும் ஹீரோயினாக நடிக்கின்றனர்.ரொமான்டிக் காமெடி படமாக இந்த படம் உருவாகவுள்ளது.

இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது இதில் முக்கிய படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.கொரோனா காலம் என்பதால் இதனை லைவாக யூடியூப்பிலும் படக்குழுவினர் ஒளிபரப்பினர்.படத்தின் ஷூட்டிங் வெகுவிரைவில் தொடங்கவுள்ளது

இது குறித்து இயக்குனர் ஹரிஹரன்  A  கூறியது...

துவக்கத்தில்  எங்கள் படக்குழு படத்தின் கதாபாத்திரத்திற்கு ஈடுசெய்யும் வகையிலான, ஹீரோயினை தேடும் பணியில் மும்முரமாக இருந்தது. இப்பொழுது, இணையத்தில் தற்போது மிகவும் பிரபலமான திறமை வாய்ந்த  அவந்திகா மற்றும் தேஜூ அஸ்வினி இப்படத்தில் இணைந்துள்ளனர். காதல் காமெடி திரைப்படங்களில் கதாபாத்திரங்கள் தான் மிகப்பெரும் பங்குவகுகிக்கும்.  அதனால் கதையின் உயிரோட்டத்தை மேம்படுத்தும் கதாநாயகிகளை தேர்ந்தெடுக்க விரும்பினோம். இருவரையும் ஆடிஷன் செய்த பிறகு, இந்த கதைக்கு பொருத்தமானவர்கள் இவர்கள் தான் என எங்களுக்கு தோன்றியது.  அவந்திகா பெங்களூரை சேர்ந்த மாடல் மற்றும் Asku Maaro பாடல் மூலம் பிரபலமானவர்.

அஷ்வின்குமார் லக்ஷ்மிகாந்த் , அவந்திகா மற்றும் தேஜூ அஸ்வினி ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க,  இவர்களுடன் Vijay TV Cooku with Comali பிரபலம் நடிகர் புகழ், டெல்லி கணேஷ், சுப்பு மற்றும் பல நடிகர்கள் இப்படத்தில் நடிக்கவுள்ளனர். படத்தை எழுதி, இயக்குவது A ஹரிஹரன், ஒளிப்பதிவு ரிச்சர்ட் எம் நாதன், இசை- விவேக்-மெர்வின், கலை இயக்கம்- G துரைராஜ், படதொகுப்பு- JA மதிவதணன், அலங்கார பணிகள்- A கீர்த்திவாசன், பாடல் வரிகள் - பாலகுமாரன் M, நடன அமைப்பு- அப்சர் பார்த்துகொள்கிறார்கள்.