தமிழ் திரை உலகின் மிக முக்கிய கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் அசோக்செல்வன் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளிவந்த சூது கவ்வும் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து பீட்சா 2 வில்லா, தெகிடி, கூட்டத்தில் ஒருவன், சம் டைம்ஸ் , Oh My கடவுளே உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தார்.

கடைசியாக இந்த ஆண்டு(2022) நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மதலீலை மற்றும் ஹாஸ்டல் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் நித்தம் ஒரு வானம் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இந்த வரிசையில் முன்னதாக அசோக்செல்வன் நடிப்பில் ஆக்ஷன் திரில்லர் படமாக வெளிவருகிறது வேழம். அறிமுக இயக்குனர் சந்தீப் சியாம் இயக்கத்தில் உருவாகியுள்ள வேழம் படத்தில் அசோக் செல்வன் உடன் இணைந்து ஜனனி மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

K 4 KREATIONS தயாரிப்பில் உருவாகியிருக்கும் வேழம் திரைப்படத்திற்கு சக்தி அரவிந்த் ஒளிப்பதிவு செய்ய, ஜானு சந்தர் இசையமைத்துள்ளார். வருகிற ஜூன் 24ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ள வேழம் திரைப்படத்திற்கு சென்சாரில் U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.