ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் டெடி. இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடித்துள்ளார். யுவா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

teddy arya teddy

திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து நடிக்கும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடைசியாக ஆர்யா மற்றும் சாயிஷா காப்பான் படத்தில் நடித்திருந்தனர். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளும் முடிவடைந்தது. 

teddy teddy teddy

என் இனிய தனிமையே மற்றும் நண்பியே பாடல் வெளியானது. தற்போது படத்தின் டீஸர் வெளியானது. மகிழ் திருமேனி படத்தின் வில்லனாக நடித்து அசத்தியுள்ளார். நிச்சயம் இந்த படம் குழந்தைகள் விரும்பும் படமாக இருக்கும். சம்மர் ரிலீஸாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.