தமிழ் சினிமாவில் பல போராட்டங்களுக்கு பிறகு வெற்றி கண்டவர் நடிகர் அருண் விஜய்.தனது செகண்ட் இன்னிங்ஸில் தொட்டதெல்லாம் வெற்றியாக இவருக்கு அமைந்து வருகிறது.மாஃபியா,பாக்ஸர்,அக்னி சிறகுகள்,அருண் விஜய் 30 போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

Arun Vijay VijayAntony Movie Final Schedule Starts

இவரது மாஃபியா படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.மூடர் கூடம் படத்தை இயக்கிய நவீன் இயக்கத்தில் அக்னி சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார்.விஜய் ஆண்டனி இந்த படத்தில் மற்றுமொரு ஹீரோவாக நடித்து வருகிறார்.

Arun Vijay VijayAntony Movie Final Schedule Starts

இந்த படத்தின் இரண்டுக்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்திருந்தது இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் தயாராகியுள்ளனர்.இது குறித்த அறிவிப்பை அருண்விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.