விவேக் இயக்கத்தில் பாக்ஸர் படத்தில் நடிக்கவிருக்கிறார் அருண்விஜய். இயக்குனர் விவேக் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது கூடுதல் சிறப்பு. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்கிறார். பாக்ஸர் படத்தின் கேரக்டருக்காக மலேசியா மற்றும், வியட்நாமில் சிறப்பு பயிற்சிகளை எடுத்து வந்தார் அருண் விஜய். இமான் இசையில் இதன் பாடல்கள் உருவாகி வருகிறது. கடந்த ஆண்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதில் அருண் விஜய்யின் உடலமைப்பு பலரையும் கவர்ந்தது.

சமீபத்தில் இப்படம் குறித்து பதிவு செய்த அருண் விஜய். இந்த படத்திற்காக நான் மிகவும் கடினமாக உழைத்து வந்தேன். முழுமையாக இதன் படப்பிடிப்பு இன்னும் துவங்கவில்லை. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கடும் முயற்சியும், முழு அர்ப்பணிப்பும் தேவை இந்த படத்திற்கு. சரியான கால கட்டத்தில் இந்த ப்ராஜெக்ட்டில் அடியெடுத்து வைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். 

படத்தின் தயாரிப்பாளர் மதியழகன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தற்போது இந்த படத்தில் உள்ள கெட்டப்புடன் அருண் விஜய் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவரது ஹேர் ஸ்டைல் பலரையும் ஈர்த்து வருகிறது. வெளிநாட்டில் இருக்கும் பிரபல குத்து சண்டை வீரர்கள் போலவே கெட்டப்பில் தன்னை செதுக்கியிருக்கிறார் அருண்விஜய். இந்நிலையில் ரசிகர் ஒருவர், எவ்வளவு நேரமாகிறது இந்த ஹேர் ஸ்டைலுக்கு என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு இரண்டரை மணி நேரமாகிறது என்று பதிலளித்துள்ளார். 

எந்த ஒரு ஜானராக இருக்கட்டும், அதற்கு ஏற்றார் போல் தன்னை மாற்றி கொள்வது தான் கலைஞனின் திறமை. அதை சரியாக செய்து வருகிறார் அருண் விஜய். இவர் நடிப்பில் வரவிருக்கும் சினம், ஜிந்தாபாத், அக்னிச்சிறகுகள் போன்ற படங்களிலும் கெட்டப்பில் வித்தியாசம் காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.