பாகுபலி வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் வெளியான படம் சாஹோ. சுஜீத் இயக்கிய இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக ‌ஷ்ரத்தா கபூர் நடித்திருந்தார். இதில் நீல் நிதின் முகேஷ், அருண் விஜய், ஏமி ஜாக்சன், மந்த்ரா பேடி, ஜாக்கி ஷ்ராஃப், லால், மகேஷ் மஞ்ரேக்கர், சங்கி பாண்டே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். நேற்று வெளியாகி சுமாராகவே ஓடிக்கொண்டிருக்கிறது. 

saaho

அயல்நாட்டில் வாழும் கோடீஸ்வரர்களில் ஒருவராகவும், ராய் நிறுவனத்தின் உரிமையாளராகவும் வருகிறார் ஜாக்கி ஷெராஃப். விலைமதிப்பற்ற பிளாக் பாக்ஸை மும்பையில் வாங்கிகொண்டு மகனை பார்க்கச்செல்லும் வழியில் இறந்துவிடுகிறார். தந்தையை கொன்றவர்களை பழிவாங்க வரும் நாயகன் என்னனென்ன செய்கிறார் என்பது தான் கதைச்சுருக்கம்.

arunvijay

படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்தும் பிரபாஸ் உடன் பணிபுரிந்தது குறித்தும் பேசியுள்ளார் நடிகர் அருண் விஜய். முதலில் ஹிந்தியில் பேசத் துவங்கினாராம். அத்தருணத்தில் உங்களுக்கு ஹிந்தி தெரியாதா என்று மந்திரா பேடி கேட்டாராம். அங்குள்ள நடிகர்கள் அனைவரும் சரளமாக பேசும் போது நாமும் பேசிவிட வேண்டும் என்று இம்முடிவை மேற்கொண்டதாக கூறினார்.