தமிழ் சினிமாவில் பல போராட்டங்களுக்கு பிறகு வெற்றி கண்டவர் நடிகர் அருண் விஜய்.தனது செகண்ட் இன்னிங்ஸில் தொட்டதெல்லாம் வெற்றியாக இவருக்கு அமைந்து வருகிறது .இவர் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ள தடம் படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.பிரபாஸின் சாஹோ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Arun Vijay Thadam

இதனை தொடர்ந்து தற்போது துருவங்கள் பதினாறு இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் மாஃபியா,பாக்ஸர் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.தற்போது இவர் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.இவர் நடிக்கும் புதிய படத்தை இவரது தந்தை விஜயகுமார் தயாரிக்கிறார்.இந்த படத்தை அறிமுக இயக்குனர் அரவிந்த் இயக்குகிறார்.

Arun Vijay New Movie

தன்யா ஹோப் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.இந்த படம் 2014-ல் வெளியான மெல்போர்ன் என்னும் இரானிய படத்தின் தழுவல் என்று நம்பத்தக்க வட்டாரங்களிடம் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளது.இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Arun Vijay New Movie