தமிழ் சினிமாவில் பல போராட்டங்களுக்கு பிறகு வெற்றி கண்டவர் நடிகர் அருண் விஜய்.தனது செகண்ட் இன்னிங்ஸில் தொட்டதெல்லாம் வெற்றியாக இவருக்கு அமைந்து வருகிறது. தடம், செக்க சிவந்த வானம், மாஃபியா என ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டி நடித்துள்ளார். தற்போது நவீன் இயக்கத்தில் உருவான அக்னிச் சிறகுகள் படத்தில் நடித்துள்ளார். 

Arun Vijay Gets Injured During Workout

ஊரடங்கால் ஜிம்முக்கு செல்ல இயலாமல் வீட்டின் மொட்டை மாடியில் உடற்பயிற்சி செய்து வருகிறார். இந்நிலையில் நடிகர் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் அந்தரத்தில் கம்பி ஒன்றில் தலைகீழாக தொங்கி உடற்பயிற்சி செய்த போது தவறி கீழே விழுகிறார். இதனை முயற்சிக்காதீர்கள். எப்பொழுதுமே உடற்பயிற்சி செய்யும் போது உங்கள் ஜிம் உபகரணங்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள் என்று பதிவு செய்துள்ளார். 

Arun Vijay Gets Injured During Workout

கிழே விழுந்த போது சரியாக ஒரு வாரத்திற்கு எனக்கு காலில் வீக்கம் இருந்தது. நல்லவேளை தலையில் அடிபடவில்லை. கடவுளுக்கு நன்றி. பயிற்சியாளர்கள் அல்லது கண்காணிப்பாளர்கள் துணை இல்லாமல் உடற்பயிற்சி செய்யாதீர்கள் என்று ரசிகர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். அருண் விஜய் கைவசம் பாக்ஸர், சினம், ஜிந்தாபாத் போன்ற படங்கள் உள்ளது.