மாஃபியா படத்தின் ரிலீஸை தொடர்ந்து அருண்விஜய் பாக்ஸர்,சினம்,AV 31 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.அருண் விஜய் நடிக்கும் AV 31 படத்தை அறிவழகன் இயக்குகிறார்.இந்த படத்தில் ரெஜினா மற்றும் ஸ்டெபி படேல் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

Arun Vijay AV 31 Shooting Update Regina Cassandra

சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்திற்கு ஜிந்தாபாத் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர் என்ற தகவல் கிடைத்திருந்தது.ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது.

Arun Vijay AV 31 Shooting Update Regina Cassandra

தற்போது இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது என்றும்,இந்த படப்பிடிப்பு ஆக்ரா,டெல்லி பகுதிகளில் நடைபெறும் என்றும் படத்தின் நாயகன் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.