தளபதி விஜயின் பிகில் திரைப்படம் தீபாவளியையொட்டி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ஓடி வருகிறது.இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார்.

Arjun Das Statement Thalapathy 64 Lokesh kanagaraj

மாளவிகா மோஹனன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தில் விஜய்சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.சாந்தனு,ஆன்டனி வர்கிஸ்,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Arjun Das Statement Thalapathy 64 Lokesh kanagaraj

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை,டெல்லி பகுதிகளில் நடைபெற்று முடிந்தது.கைதி படத்தில் முக்கிய வில்லனாக நடித்திருந்த அர்ஜுன்தாஸ் இந்த படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்ற அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியானது.

Arjun Das Statement Thalapathy 64 Lokesh kanagaraj

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.இரண்டாவது படம் நடிக்கும் தனக்கு இது மிகப்பெரிய வாய்ப்பு விஜய்,விஜய் சேதுபதி என்று இரு பெரும் நடிகர்களுடன் இணைந்து நடிக்க ஆர்வமாக உள்ளேன்.இந்த வாய்ப்பை அளித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜிற்கு நன்றி என்று அவர் பதிவிட்டுள்ளார்.