மணிரத்னம் படத்தில் இணைந்த அஜித் பட வில்லன் !
By Sakthi Priyan | Galatta | December 21, 2019 10:02 AM IST

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் ஐந்து மொழிகளில் உருவாக்கப்பட்டு படமாகிறது இதை மணிரத்னம் இயக்குகிறார். வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ், நந்தினியாக ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடிக்க உள்ளனர் என்ற தகவல் சமீபத்தில் தெரியவந்தது.
ரகுமான், ஜெயராம் , லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ள இந்த படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். டிசம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
தாய்லாந்தில் உள்ள காடுகளை படப்பிடிப்பு தளமாக மணிரத்னம் தேர்வு செய்துள்ளார். பாகுபலி போல் இரண்டு பாகங்களாக உருவாகவிருக்கும் இப்படத்தில் பன்னிரண்டு பாடல்கள் இருக்கக்கூடும் என்று சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார். தேதியின்மை காரணமாக சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகர் பார்த்திபன் விலகினர். சமீபத்தில் நடிகர் ரியாஸ் கான் படத்தில் இணைந்தார். தற்போது அர்ஜுன் சிதம்பரம் படத்தில் இணைந்துள்ளார். இவர் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.