தமிழ் சினிமாவின் இசையை உலகளவில் கொண்டு சேர்த்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.தற்போது இவர் தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் பிகில் படத்திற்கு இசையமைத்துள்ளார்.சமீபத்தில் இந்த படத்தில் இருந்து வெளியான சிங்கப்பெண்ணெ பாடல் பட்டி தொட்டி எங்கும் செம ஹிட் அடித்து வருகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களுக்காக அவ்வப்போது லைவ் கான்சர்ட்களையும் நடத்தி வருகிறார்.இந்த முறை இந்த லைவ் கான்சர்ட் சென்னையில் நடைபெறுகிறது.ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் இந்த கான்சர்டில் முதல்முறையாக சிங்கப்பெண்ணே பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் லைவாக பாடவிருக்கிறார்.

இந்த கான்சர்டிற்கான டிக்கெட்களை Paytm,Ticketnew மற்றும் Insider.in ஆகிய இணையதளங்களில் பதிவுசெய்யலாம்.இந்த கான்சர்டில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து சித் ஸ்ரீராம்,ஸ்வேதா மோகன் உள்ளிட்ட முன்னணி பாடகர்களும் பங்கேற்கின்றனர்.மேலும் பல திரைநட்சத்திரங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர்.