நிஷப்தம்/சைலென்ஸ் திரைப்படத்தின் முதல்-நேரடி-சேவையின் உலகளவிலான பிரீமியரை அறிவித்தது. கோனா பிலிம்கார்ப்பரேஷனுடன் இணைந்து பீப்பிள் மீடியா கார்ப்ரேஷன் டி.ஜி. விஷ்வா பிரசாத் தயாரிப்பில், ஹேமந்த் மதுகர் இயக்கியது மற்றும் பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள கலைஞர், பிரபல-இசைக்கலைஞராக உள்ள அவரது கணவர் மற்றும் அவரது சிறந்த நண்பர் விசித்திரமான முறையில் காணாமல் போகிறார்இதை சுற்றி நகரும் ஒரு கதைக்களத்தை கொண்ட் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஆகும். 

இந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தில் அனுஷ்கா ஷெட்டி, ஆர். மாதவன் மற்றும் அஞ்சலி ஆகியோர் ஷாலினி பாண்டே, சுப்பராஜு மற்றும் ஸ்ரீனிவாஸ் அவசரலா  ஆகியோருடன் இணைந்து முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  மைக்கேல் மேட்சனுக்கு இந்திய சினிமாவில் இதுமுதல் படமாக அமையும் (ஒன்ஸ் அப்பான் எடைம் இன் ஹாலிவுட், கில் பில், ரிசர்வயர் டாக்ஸ்). இந்தியாவிலும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிராந்தியங்களிலும் உள்ள ப்ரைம் உறுப்பினர்கள் அக்டோபர் 2 முதல் அமேசான் ப்ரைம்வீடியோவில் படத்தை ஸ்ட்ரீம் செய்யலாம்.

அமேசான் ப்ரைம் வீடியோ இந்தியாவின், கண்டென்ட்,  இயக்குநரும் தலைவருமான விஜய் சுப்பிரமணியம் கூறுகையில், சமீபத்தில் வெளியான நேரடி-டிஜிட்டல் படங்களின் வெற்றிகரமான உலகளாவிய பிரீமியர்ஸ், நல்ல கதைகள் எப்போதும்  மொழித் தடைகளையும் கடந்து பயணிக்கும் என்பதை நிரூபித்துள்ளன. சூப்பர் ஸ்டார்களான ஆர். மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி ஆகியோர் எங்கள் வாடிக்கையாளர்களுக்காக நிஷப்தம் / சைலென்ஸ் படத்தின் மூலம் திரையில் ஒன்றாக தோன்றப் போகிறார்கள் என்பதில் மகிழ்ச்சியடைகிறோம். 

இந்த படம்  டிஜிட்டல் தளத்தில் அனுஷ்கா ஷெட்டியின் அறிமுகத்தைக் குறிக்கும் மற்றும்  அமேசான் அசல் தொடரான ப்ரீத்தின் சூப்பர் ஹிட் சீசன் 1 க்குப் பிறகு ஆர். மாதவனையும் மீண்டும் பிரைம் வீடியோவுக்குஅழைத்து வந்திருக்கிறது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு மிகவும் பிரபலமான நடிகர்கள் மீண்டும் திரையில் தோன்றுகிறார்கள்- கண்டிப்பாக இந்த படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கு விருந்தாக அமையும். அமேசான் ப்ரைம் வீடியோவுடன் இணைந்து அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட த்ரில்லர் நிஷாப்தத்தை பார்வையாளர்களிடம் கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று இயக்குனர் ஹேமந்த் மதுகர் கூறினார். 

நாங்கள் இந்த ப்ரொஜெக்ட்டை அறிவித்ததிலிருந்து, படத்திற்கான ரசிகர்களின் உற்சாகத்தை எங்களால் தெளிவாக உணரமுடிந்தது. திறமையான சிறந்த இந்திய நடிகர்கள்நடித்துள்ள இக்கதையை பார்வையாளர்களிடம் கொண்டு வருவதற்கான சரியான வாய்ப்புக்காகநாங்கள் காத்திருக்கிறோம். இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழ் இரண்டிலும் இணையாக படமாக்கப்பட்டது - 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் அமேசான் ப்ரைம் வீடியோவின் உலகளாவிய வெளியீட்டின் மூலம், படத்தை உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு எடுத்துச் செல்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

நான் இதுவரை நடித்த மற்ற கதாபாத்திரத்துடன் ஒப்பிடும்போது சாக்ஷி எனக்கு மிகவும் புதிய கதாபாத்திரம் என்று நிஷப்தம் நடிகர் அனுஷ்கா ஷெட்டி கூறினார். எனக்கு வசதியான கதாபாத்திரத்தில் நடிப்பதில் இருந்து என்னை வெளியேகொண்டுவந்தது. இந்த கதாபாத்திரம் என்னைத் தேடி வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.  மாதவனுடன் மீண்டும் பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியாக  இருந்தது அவரது நடிப்பிற்கு எப்போதுமே நான் ஒரு அபிமானி. சுப்பராஜு, அவசரலா ஸ்ரீனிவாஸ், அஞ்சலி, ஷாலினி பாண்டே, மைக்கேல் மேட்சன், ஒலிவியா டங்க்லி மற்றும் எங்கள் இயக்குனர் ஹேமந்த் மதுகர், திரு. விவேக் குச்சிபோட்லா, டிஓபி ஷானில் தியோ மற்றும் மற்றும் நிஷப்தத்தின் ஒரு பகுதியாகஇருக்கும் எங்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் குழுவினர் ஒவ்வொருவருக்கும் நன்றி. ஒரு குழுவாக நாங்கள் நிஷாப்தத்தை ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும் கொண்டு வரகாத்திருக்கிறோம்.  

நான் த்ரில்லர் படங்களின் ஒரு பகுதியாக இருப்பதையும் அதைபார்ப்பதையும் ரசிக்கிறேன். நிஷப்தம் நிச்சயமாக நான் இணைந்திருக்கும் மிகவும்சுவாரஸ்யமான திரைப்படங்களில் ஒன்றாகும், என்று நிஷப்தம் நடிகர் ஆர்.மாதவன் கூறினார். சியாட்டில்மற்றும் அமெரிக்காவின் பிற பகுதிகளில் பரவலாக படமாக்கப்பட்டது, இந்த கதை உலகளாவிய பார்வையாளர்களையும் தொடர்புபடுத்தும் விதமாகஇருக்கும். ப்ரைம் வீடியோவில் நிஷப்தம் படத்தின் அறிமுகம், உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் அதன் துணிச்சலான கதைக்களத்தை அனுபவிக்க அனுமதிக்கும்! அமேசான் ப்ரைம் வீடியோவில் நிஷப்தத்தின் உலகளாவிய பிரீமியரை எதிர்பார்க்கிறேன் - இது ப்ரீத்திற்கு பிறகு எனது ப்ரைம் வீடியோ பிரவேசத்தைக் குறிக்கிறது. 200 + நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் ஒரே நேரத்தில் வெளியாவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது."கதைச் சுருக்கம்

காது கேட்காத மற்றும் வாய்பேசமுடியாத திறைமையான கலைஞரான சாக்ஷி, எதிர்பாராத விதமாக பேய் இருப்பதாக நம்பப்படும் வில்லாவில் நிகழும் மோசமான சம்பவத்தை பார்த்ததால் அதன் குற்றவியல் விசாரணையில்  சிக்கிக் கொள்கிறாள். துப்பறியும் போலிஸ் குழுவினர் இந்த வழக்கை முழுவதுமாக ஆராய்ந்து பேய் முதல் காணாமல் போன இளம்பெண் வரையிலான சந்தேக நபர்களின் பட்டியலை தாயார் செய்கின்றனர். கடைசி வரை யூகிக்க முடியாத ஒரு உங்களை இருக்கையின் நுணிக்கே வரைவழைக்கும் ஒரு த்ரில்லர் படமாக நிஷப்தம் இருக்கும்.