கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தவர் நடிகை அஞ்சலி. சமீபத்தில் இவர் நடிப்பில் நாடோடிகள் 2 திரைப்படம் வெளியானது. அனுஷ்கா மற்றும் மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள நிசப்தம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் சில தெலுங்கு படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Anjali

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து திரைப்படங்களின் படப்பிடிப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் நடிகர்கள் நடிகைகள் தங்கள் வீடுகளிலேயே இருக்கின்றனர். தாங்கள் என்ன செய்து டைம் பாஸ் செய்து வருகின்றனர் என்பது பற்றி முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். 

anjali anjali

இந்நிலையில் நடிகை அஞ்சலியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், புது நபர் எங்கள் குடும்பத்தில் இணைந்திருக்கிறார் என நாய்க்குட்டியின் புகைப்படத்தை வெளியிட்டு பதிவிட்டுள்ளார். இந்த அழகான நாய்க்குட்டியின் பெயர் போலோ என்றும் குறிப்பிட்டுள்ளார்.