தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதை தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

Thalapathy 64 Lokesh Kanagaraj

இதனை அடுத்து இவர் நடிக்கும் அடுத்த படத்தை மாநகரம்,கைதி உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.இந்த படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்கவுள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.விஜயின் மேனேஜர் ஜெகதீஷ் மற்றும் செவன் Screen ஸ்டுடியோவை சேர்ந்த லலித் குமார் இந்த படத்தில் லைன் Producer ஆக பணியாற்றுகிறார்கள்.

Thalapathy 64 Vijay

Anirudh Thalapathy 64

நேற்று சென்னையில் ஒரு விழாவில் கலந்துகொண்ட அனிருத்திடம் தளபதி 64 குறித்து ரசிகர்கள் கேள்வியெழுப்பினார்.தற்போது தர்பார்,இந்தியன் 2 படங்களில் வேலைபார்த்து வருகிறேன்.அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவித்தார்.இது நிச்சயம் தளபதி 64 அறிவிப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.