ப்ளாக்பஸ்டர் ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் டாப் ஸ்டார் !
By Aravind Selvam | Galatta | August 16, 2019 13:40 PM IST

கடந்த வருடம் வெளியாகி பாலிவுட் இண்டஸ்ட்ரியில் பட்டையை கிளப்பிய திரைப்படங்களில் ஒன்று அந்தாதுன்.ஆயுஷ்மான் குரானா,தபு,ராதிகா ஆப்தே உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
இந்த படம் சமீபத்தில் சிறந்த படத்திற்கான தேசிய விருது உள்ளிட்ட மூன்று தேசிய விருதுகளை கைப்பற்றியது.இதனை தொடர்ந்து இந்த படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்படவுள்ளது.இந்த படத்தை தனுஷ்,சித்தார்த்,போனி கபூர் உள்ளிட்டோர் ரீமேக் செய்ய விருப்பம் தெரிவித்திருந்தனர்.
தற்போது இந்த படத்தின் ரீமேக் உரிமையை நடிகரும் தயாரிப்பாளருமான தியாகராஜன் கைப்பற்றியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த படத்தில் டாப் ஸ்டார் பிரசாந்த் ஹீரோவாக நடிப்பார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.மற்ற நடிகர் நடிகைகள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.