உலகையே அச்சுறுத்தி வரும் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டு வர அரசு தங்களால் முடிந்த வேலைகளை செய்து வருகின்றனர். 

Siva

கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மே 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பலதரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் திரைப்பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

T Siva

இந்நிலையில் அம்மா கிரியேசன்ஸ் டி.சிவா அவர்கள் தன்னால் முடிந்த உதவியை செய்துள்ளார். 10,000 ஆவின் மோர் பாக்கெட்டுகளை சென்னை நகர காவல் துறைக்கு வழங்கியுள்ளார். அடிஷனல் கமிஷனர் ஆஃ போலீஸ் திரு Dr. தினகரன் IPS மற்றும் TS.அன்பு IPS இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃ போலீஸ் ஆகியோரிடம் வழங்கினார். உயிரை பணயம் வைத்து சூப்பர் ஹீரோவாக திகழும் காவல் துறை அதிகாரிகளுக்கு உதவிக்கரம் நீட்டிய சிவா அவர்களை பாராட்டுவதில் பெருமை கொள்கிறது கலாட்டா.