அமேசான் காட்டுத் தீயில் உயிர்பிழைத்த மிருகங்களை மீட்கும் காட்சிகள் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.

பற்றி எரியும் அமேசான் மழைக்காடுகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற குரல் உலகம் முழுக்க ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. இதனால், அமேசான் காட்டில் எரிந்துவரும் தீயை அணைக்கும் பணிகளில் கிட்டத்தட்ட 75 ஆயிரம் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Amazon fire animal

கடந்த 3 வாரங்களாக அமேசான் காடுகளும், காட்டில் வாலும் பழங்குடியின மனிதர்களும், விலங்குகளும், பறவைகளும் தீயில் சிக்கி கருவாடாகி வருகின்றன. புவியின் நுரையீரல் என்று வர்ணிக்கப்படும் அமேசான் மழைக்காடுகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தீயில் கரைந்து அழிந்து சாம்பலாகி வருகிறது.

Amazon fire animal

இதனிடையே, காட்டில் வாழ்ந்த விலங்குகள், பறவைகள் எனப் பல தரப்பட்ட உயிரினங்கள் தீக்கரையில் சிக்கி சின்னாபின்னமான போதிலும், தப்பித்தால் பிழைத்தால் போதும் என்று.. உயிர் ஊசலாடும் நிலையில் ஒன்றிரண்டு விலங்குகளும், பறவைகளும் அழுதுகொண்டும்.. மயங்கிய நிலையிலும் மீட்கப்பட்டு வருகின்றன.

அப்படி மீட்கப்படும் உயிரினங்களுக்கு உண்மையான மனிதநேய ஹீரோக்கள் தண்ணீர் கொடுத்தும், உணவுகளை ஊட்டிவிட்டும் உயிர்கொடுத்து வருகின்றனர். மயங்கிய நிலையில் மீட்கப்படும் உயிரினங்களை மீட்பாளார்கள் சுமந்துகொண்டு வரும் காட்சிகள் எல்லாம் நெஞ்சைப் பதைபதைக்கிறது.

Amazon fire animal

இயல்பு நிலையில், மனிதர்களைக் கண்டலே பறந்து செல்லும் பறவைகளும், பார்ப்பதற்கே பயமாக இருக்கும் விலங்குகள் அனைத்தும், இன்று மனித நேய மனிதர்களிடையே தஞ்சமடைந்து தண்ணீர் அருந்துவதும், உணவு உண்பதும் போன்ற காட்சிகள் எல்லாம் பார்க்கவே பரிதவிக்க வைக்கிறது. பார்ப்பதற்கே பரிதாபமாகக் காணப்படும் அந்த காட்சிகள் எல்லாம், காண்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவைக்கிறது. தற்போது, அந்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி வருகின்றன.