தமிழ் திரையுலகில் சிறந்த நடிகைகளில் ஒருவர் அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் திரையில் கால்பதித்த இவருக்கு மைனா திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. கடைசியாக இவரது நடிப்பில் ஆடை திரைப்படம் வெளியானது. கொரோனா காரணத்தினால் இவர் நடித்த அதோ அந்த பறவை போல படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. 

AmalaPaul Celebrates Birthday Of Her Friend Ayoobi

சமீபத்தில் மும்பையை சேர்ந்த பவ்நிந்தர் சிங் எனும் பாடகரை திருமணம் செய்துகொண்டார். சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் அமல் பால், சில தினங்களுக்கு முன்பு நண்பர்களுடன் வேட்டி சட்டையில் உள்ள புகைப்படத்தை வெளியிட்டார். பதிவு செய்த சில நொடிகளிலேயே அந்த புகைப்படம் பட்டி தொட்டியெங்கும் வைரலானது. 

AmalaPaul Celebrates Birthday Of Her Friend Ayoobi

இந்நிலையில் தனது நண்பரின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை அமலா பால், தனது இன்ஸ்டராகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை அவர் வெளியிட்டு உள்ளார். அதில் அவரது நண்பரின் மொட்டை தலையில் முத்தம் கொடுப்பது போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. மேலும் அமலா பால் வெளியிட்டுள்ள வீடியோவில் அவரது மொட்டை தலையில் கேக்கை பூசி விளையாடியுள்ளார்.