தமிழ் திரையுலகில் சிறந்த நடிகைகளில் ஒருவர் அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் திரையில் கால்பதித்த இவருக்கு மைனா திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. கடைசியாக இவரது நடிப்பில் ஆடை திரைப்படம் வெளியானது. அதோ அந்த பறவை போல படம் திரைக்கு வரவுள்ளது. 

amalapaulmarriage Amalapaulmarriage

2014-ம் ஆண்டு இயக்குனர் விஜய்யை திருமணம் செய்த அமலா பால், கருத்து வேறுபாடு காரணமாக 2017-ம் ஆண்டில் விவாகரத்து வாங்கினார். தற்போது மும்பையை சேர்ந்த பவ்நிந்தர் சிங் எனும் பாடகரை திருமணம் செய்துள்ளார். 

Amalapaul Amalapaul Amalapaulmarriage

இந்த புகைப்படங்களை த்ரோ பாக் என குறிப்பிட்டு பவ்நிந்தர் சிங் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தை தெறிக்கவிடுகிறது. லிவிங்டுகெதரில் இருந்த இவர்களை திருமண கோலத்தில் பார்த்த ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்த அழகான ஜோடிக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது நம் கலாட்டா.