மலையாள திரையுலகில் பட்டம் போலே என்ற படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். அதனைத்தொடர்ந்து கன்னடத்தில் ஒரு படம், பின்னர் ஹிந்தியில் பியாண்ட் தி க்ளவுட்ஸ் படத்தின் மூலமாக பாலிவுட்டிலும் கால் பதித்தார். அதன்பின் பேட்ட படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார் மாளவிகா. 

தனுஷ் பிறந்த நாளான ஜூலை 28-ம் தேதி அவருக்குப் பலரும் வாழ்த்துத் தெரிவித்தார்கள். அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் விதமாக மாளவிகா மோகனன், இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தனுஷ் சார். அற்புதமான ஆண்டு வரவிருக்கிறது. உங்களோடு பணிபுரிய ஆவலாக உள்ளேன். விரைவில் யாரேனும் நம் இருவரையும் ஒரே படத்துக்குத் தேர்வு செய்வார்கள் என்று நம்புகிறேன் என்று தெரிவித்திருந்தார்.

கொரோனா காரணமாக படப்பிடிப்பு இல்லாமல் இருக்கும் மாளவிகா, சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.
இந்நிலையில் மாளவிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது புதிய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பாரம்பரிய உடையான பட்டு புடவையில் அழகாக போஸ் தரும் மாளவிகா மோஹனனை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். 

இந்நிலையில் நடிகை அமலா பால், அப்பதிவில் ஹாட் என்று கமெண்ட் செய்துள்ளார். ஒரே துறையில் இருக்கும் நடிகைகைள் தோழிகளாக இருப்பது திரைத்துறையில் ஆரோக்கியத்தை உணர்த்துகிறது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் ரசிகர்கள். 

amala paul praises malavika mohanan on her photoshoot

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் மாளவிகா. படம் வெளியாவதற்கு முன்னரே தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட்டாக உள்ளார். தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இணைந்து நடிக்கும் இந்த படம் அதிக எதிர்பார்ப்பில் உள்ளது. 

இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளை லாக்டவுனில் துவங்கினர் படக்குழுவினர். ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. சமீபத்தில் பாடல்களின் கரோக்கி வெர்ஷனும் வெளியானது. ஏப்ரல் 9-ம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக மாஸ்டர் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. படத்தின் தயாரிப்பாளரும் நடிகர் விஜயின் மாமாவுமான சேவியர் பிரிட்டோ, என்ன நடந்தாலும் மாஸ்டர் படம் தியேட்டரில் தான் ரிலீஸ் ஆகும் என்பதை உறுதி செய்தார்.