தமிழ் திரையுலகில் சிறந்த நடிகைகளில் ஒருவர் அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் திரையில் கால்பதித்த இவருக்கு மைனா திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. கடைசியாக இவரது நடிப்பில் ஆடை திரைப்படம் வெளியானது. அதோ அந்த பறவை போல படம் திரைக்கு வரவுள்ளது. சமீபத்தில் மும்பையை சேர்ந்த பவ்நிந்தர் சிங் எனும் பாடகரை திருமணம் செய்துள்ளார். 

Amala Paul House Party For Her Brothers Birthday

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வெளியே வருகின்றனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரை பிரபலங்கள் தங்களின் பொழுதுபோக்கு வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். 

Amala Paul House Party For Her Brothers Birthday

இந்நிலையில் வீட்டில் சீரியல் லைட், சவுண்ட் சிஸ்டம் வைத்து தனியாக பார்ட்டி நடனமாடுகிறார் அமலா பால். அதற்கு காரணம் அவரது மூத்த சகோதரருக்கு இன்று பிறந்தநாள். ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள முடியாத வேளையில் இப்படி வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து சொல்லி இருக்கிறார்.