1980,1990களில் இளைஞர்களின் இதயங்களை கவந்தவர் அமலா.உலகநாயகனுடன் சத்யா,சூப்பர்ஸ்டாருடன் மாப்பிள்ளை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.கடைசியாக தமிழில் 1991-ல் கற்பூர முல்லை என்ற படத்தில் நடித்திருந்தார்.

Amala Akkineni Joins Cast of Shrawanand Bilingual

1992-ல் தெலுங்கின் முன்னணி நடிகர் நாகர்ஜூனாவை திருமணம் செய்துகொண்ட இவர் அதன்பின் ஓரிரு படங்களில் மட்டுமே நடித்திருந்தார்.தற்போது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் தமிழ் - தெலுங்கு படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.இந்த அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Amala Akkineni Joins Cast of Shrawanand Bilingual

ஷர்வானந்த் இந்த படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.ரித்து வர்மா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துவருகிறார்.இந்த படத்தில் ஹீரோவின் அம்மாவாக அமலா நடித்து வருகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.