குளிர் 100 திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானவர் நடிகர் சஞ்சீவ். ராஜா ராணி சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த ஆல்யா மானசாவை காதலித்து திருமணம் செய்துகொண்டனர். அவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பின் சஞ்சீவ் காற்றின் மொழி சீரியலில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த ஜோடிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. 

Sanjeev AlyaManasa

ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீடிப்பதால் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த கொடிய வைரஸை கட்டுப்படுத்த அரசு பாடுபட்டு வருகிறது. படப்பிடிப்பு இல்லாமல் இருக்கும் திரைப்பிரபலங்கள் சோஷியல் மீடியாவான முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் ஆக்டிவாக இயங்கி வருகின்றனர். தங்கள் ரசிகர்களுடன் லைவ்வில் தோன்றி பேசி வருகின்றனர்.

Sanjeev AlyaManasa

இந்நிலையில் சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பழைய வீடியோவை பகிர்ந்துள்ளார். இதில் ஆல்யா மானசா, நடு ரோட்டில் நின்றபடி சஞ்சீவ் ஐ லவ் யு என்கிறார். ஆல்யா ஏதாவது தவறு செய்துவிட்டால் இப்படி தான் விளையாடுவேன் என்று அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I know this is crazy.. but this is how i punish her wen she does any mistake.. a throw back vdo....but sweet memories😬😂🤩😘😍 @alya_manasa

A post shared by sanjeev (@sanjeev_karthick) on