விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா.குறுகிய காலத்தில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் இதயங்களில் இடம்பிடித்துவிட்டார்.இந்த தொடரில் இவரது நடிப்பை பலரும் பாராட்டி வந்தனர்.இந்த தொடரில் ஹீரோவாக சஞ்சீவ் நடித்து வந்தார்.இவருக்கும் தனியொரு ரசிகர் பட்டாளமே இருந்தது.

இந்த தொடரில் ஹீரோவாக நடிக்கும் சஞ்சீவுக்கும் மானசாவுக்கும் காதல் மலர்ந்தது.இதனை அடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.சஞ்சீவ் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காற்றின் மொழி என்ற தொடரில் நடித்து வருகிறார்.ஆல்யா மானசா விஜய் டிவியின் பிரபல கேம் ஷோ ஒன்றில் நடுவராக இருந்து வந்தார்.இந்து நிகழ்ச்சி தற்போது நிறைவடைந்துள்ளது.

கொரோனா காரணமாக பிரபலங்கள் தங்கள் நேரங்களை சமூகவலைத்தளங்களில் செல்வைத்து வருகின்றனர்.ஆல்யா மானசா சஞ்சீவ் தம்பதிக்கு சில மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது.இந்த குழந்தைக்கு ஐலா சையத் பெயரிட்டிருந்தனர்.தற்போது ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் தங்கள் மகளின் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் பதிவிட்டுள்ளார்.குட்டி பாப்பு இப்போ சுட்டி யாக மாறிவிட்டால் என்று சஞ்சீவ் பதிவிட்டுள்ளார்.பொண்ணு செம அழகா மாறிட்டு இருக்கா என்று ஆலியா பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்