தெலுங்கு சினிமா துறையை தாண்டி பிற மாநிலங்களிலும் அதிகம் ரசிகர்களை பெற்றவர் நடிகர் அல்லு அர்ஜுன். நடனம், நடிப்பு என அட்டகாசம் செய்யும் நடிகர். கங்கோத்ரி திரைப்படம் மூலம் அறிமுகமாகி அலவைகுந்தபுரம்லோ வரை அசத்தி வருகிறார். இவருக்கு அயன், அர்ஹா என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

Allu Arjun Cute Video With His Daughter Goes Viral

இந்நிலையில் அல்லு அர்ஜுன் தனது மகள் அர்ஹாவுடன் விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நான் சொல்ற பையனை கல்யாணம் பண்ணிக்கிறியா என்று விளையாட்டாக கேட்க, அதற்கு முடியாது என்று அழகாக மறுக்கிறார். மறுபடியும் அல்லு அர்ஜுன் அவளிடம் இதே கேள்வியைக் கேட்க முடியாது என்று அழுத்தமாக சொல்லிவிட்டு அப்பாவிடமிருந்து தப்பிக்க ரூமுக்குள் ஓடிப் போகிறாள். இந்த க்யூட்டான வீடியோ இணையத்தை ஈர்த்து வருகிறது. அல்லு அர்ஜுன் அவரது பதிவின் கேப்ஷனில் அட்டெம்ப்ட் நம்பர் 374 என அவரது முயற்சிகளை குறிப்பிட்டுள்ளார். 

Allu Arjun Cute Video With His Daughter Goes Viral

அலவைகுந்தபுரம்லோ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, சுகுமார் இயக்கத்தில் உருவாகும் புஷ்பா படத்தில் நடிக்கவுள்ளார் அல்லு அர்ஜுன். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் தயாராகும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. சமீபத்தில் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பட்டையை கிளப்பியது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Attempt number #374 #nanatrails 💖

A post shared by Allu Arjun (@alluarjunonline) on