நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழகம் முழுவதும் ஜூன் 30 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் தாண்டி சில செயல்பாடுகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு சில இடங்களில் மட்டும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சமீபத்தில் தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்புகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள் திறக்கப்பட சிறிது நாட்களாகும் எனத் தெரிகிறது. 

Akshay Kumar Releases Lockdown Shortfilm

இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார், கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறும்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனா பரவல் நிறைந்த சூழ்நிலையில் நாம் பணிக்கு செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கியுள்ளார். பாலிவுட்டின் பாட்சாவாக இருந்தாலும், குறைந்த நேரம் கொண்ட குறும்படத்தில் நடிப்பது பாராட்டிற்குரியது. 

Akshay Kumar Releases Lockdown Shortfilm

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் லக்ஷ்மி பாம் படத்தில் நடித்துள்ளார் அக்ஷய் குமார். அதன் பிறகு ஆனந்த் L ராய் இயக்கத்தில் உருவாகி வரும் அத்ரங்கி ரே படத்தில் நடித்து வருகிறார். தனுஷ் மற்றும் சாரா அலி கான் நடிக்கும் இந்த படத்திற்கு AR ரஹ்மான் இசையமைக்கிறார்.