தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள புதிய திரைப்படமான திட்டம் இரண்டு (PLAN B) திரைப்படம் வருகிற ஜூலை 30ஆம் தேதி நேரடியாக சோனி லைவ் OTT தளத்தில் வெளியாகிறது. திட்டம் இரண்டு (PLAN B) படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காவல்துறை அதிகாரியாக ஆதிரா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

நடிகர்கள் பாவல் நவகீதன், கோகுல் ஆனந்த், ஜீவா ரவி, முரளி ராதாகிருஷ்ணன், சுபாஷ் செல்வம், அனன்யா ராம்பிரசாத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிக்ஸர் என்டர்டைன்மென்ட் தயாரிப்பாளர் தினேஷ் கண்ணன் மற்றும் மினி ஸ்டூடியோ தயாரிப்பாளர் வினோத்குமார் இணைந்து தயாரித்துள்ளனர். 

திட்டம் இரண்டு (PLAN B) திரைப்படத்தை பிரபல ரேடியோ ஜாக்கியும் நடிகருமான விக்னேஷ் கார்த்திக் எழுதி இயக்கியுள்ளார். திட்டம் இரண்டு (PLAN B) திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய இசை அமைப்பாளர் சதீஷ் ரகுநாதன் இசையமைத்துள்ளார்.நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் திட்டம் இரண்டு திரைப்படம் கிரைம் திரில்லர் படமாக தயாராகியுள்ளது.

முன்னதாக வெளியான திட்டம் இரண்டு (PLAN B) படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில், அதைத் தொடர்ந்து வெளியான உன் கன்னக்குழியில் என்ற பாடலும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. இந்நிலையில் தற்போது படத்தின் மியூசிக்கல் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.