விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் இணைந்து நடித்து வரும் படம் 'அக்னிச் சிறகுகள்'. அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை 'மூடர் கூடம்' நவீன் இயக்கி வருகிறார். ஷாலினி பாண்டே, ரைமா சென், தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வந்தனர்.

agnisiragugal

சமீபத்தில் படக்குழுவினர் படப்பிடிப்புக்காக வெளிநாடு பயணம் மேற்கொண்டனர். படத்தில் அக்ஷரா ஹாசன் சில காட்சிகளில் நடித்ததாக செய்திகள் வெளியானது. விஜய் ஆண்டனியின் கெட்டப் சமீபத்தில் வெளியானது. சீனு என்கிற பாத்திரத்தில் நடிக்கிறார். இதைத்தொடர்ந்து அக்ஷரா ஹாசனின் கேரக்டர் விஜி என்பது தெரிந்தது.

arunvijay

தற்போது அருண் விஜய் கேரக்டர் போஸ்டர் வெளியானது. இதில் ரஞ்சித் எனும் பாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் தெரியவந்தது. அருண் விஜய் கைவசம் மாஃபியா, சினம் மற்றும் பாக்சர் போன்ற படங்கள் உள்ளது.