தளபதி விஜய் வழியில் அவரது ரசிகர்கள் ! விவரம் உள்ளே
By Aravind Selvam | Galatta | August 14, 2020 17:29 PM IST
பிகில் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் மாநகரம்,கைதி படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி முக்கிய வில்லனாக நடித்துள்ளார்.ராக்ஸ்டார்அனிரு
மாளவிகா மோஹனன் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.சாந்தனு,ரம்யா,கௌ
இந்த படத்தை Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர்.கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.சமீபத்தில் விஜயின் பிறந்தநாளுக்கு ஒரு ஸ்பெஷல் போஸ்ட்டரை மாஸ்டர் படக்குழு வெளியிட்டனர்.இந்த போஸ்டரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் செம ஹிட் அடித்துள்ளது.டிக்டாக்,யூடியூப் என்று பல தளங்களில் பல சாதனைகளை இந்த படத்தின் பாடல்கள் நிகழ்த்தி வருகிறது.பட்டிதொட்டி எங்கும் இந்த பாடல்கள் ஓயாது ஒளித்து வருகின்றன.இந்த படம் நிச்சயம் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்று படக்குழுவினர் ரசிகர்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
லாக்டவுன் நேரத்தில் தளபதி விஜயின் சில புகைப்படங்கள் மட்டுமே வெளியாகின.மாஸ்டர் டீம் மற்றும் அவர் நண்பர்களுடன் பேசி மகிழ்ந்த வீடியோகாலின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.இதனை தொடர்ந்து தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு தளபதி விஜய்க்கு ஒரு சவால் விடுத்திருந்தார்.அதனை விஜய் ஏற்பாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
மகேஷ் பாபு தனது பிறந்தநாள் அன்று க்ரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று மரக்கன்று ஒன்றை நட்டு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.மேலும் இதனை ஏற்குமாறு தளபதி விஜய்,ஜூனியர் NTR,ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோரை நாமினேட் செய்துள்ளார்.
விஜயும்,மகேஷ் பாபுவும் நண்பர்கள் என்பது அனைவரும் தெரிந்ததே.தமிழில் விஜய் எப்படியோ அப்படி ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தை தெலுங்கில் கொண்டவர் மகேஷ் பாபு.மகேஷ் பாபுவின் சில படங்களை விஜய் ரீமேக் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.மகேஷ் பாபுவின் இந்த சவாலை விஜய் ஏற்பாரா என்று ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
சமூகவலைத்தளங்களில் பெரிதாக ஆக்டிவ் ஆக இல்லாதவர் தளபதி விஜய்.அவ்வப்போது வந்தாலும் அவருடைய போஸ்ட்களுக்கு லைக்,ஷேர்கள் அள்ளும்.அப்படி இருக்கையில் இந்த சேலஞ்சை தளபதி விஜய் ஏற்றால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.நேற்று விஜய் இந்த சவாலை ஏற்று தனது வீட்டில் மரக்கன்றை நட்டு அதன் புகைப்படங்களை வெளியிட்டார்.செம சர்ப்ரைஸாக வெளியான இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி பெரிய சாதனையை நிகழ்த்தி வருகிறது.
இந்நிலையில் "தலைவன் எவ்வழியோ ரசிகர்களும் அவ்வழியே " என்பதற்கேற்ப அனைத்து மாவட்ட விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் மரக்கன்றுகள் மற்றும் செடிகளை நட்டு வைத்து அந்த புகைப்படங்களை சமுக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள் . மேலும் இந்த கொரோன ஊரடங்கு காலத்தில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் தங்களால் இயன்ற உதவிகளையும் , நற்பணிகளும் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
Breaking statement on Sivakarthikeyan's Doctor | Anirudh | Nelson
14/08/2020 07:20 PM
Hiphop Tamizha's next big album released - watch video here!
14/08/2020 06:40 PM
Arun Vijay's Sinam stunning 2nd look poster
14/08/2020 06:08 PM