மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ். அதனைத் தொடர்ந்து செக்கச்சிவந்த வானம் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ படத்தில் சீரான நடிப்பை வெளிப்படுத்தினார் அதிதி. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பிறமொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். 

Aditi Rao Classical Dance Video Without Music

இந்நிலையில் அதிதி ராவ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது குரு லீலா சாம்சனுக்காக நடனமாடி டான்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் டான்ஸ் ஆடுவதைப் பார்க்கும் போது பொதுவாக இசையைக் கேட்க முடிவதில்லை. என் குரு லீலா சாம்சனின் பிறந்தநாளுக்காக நான் ஒரு டான்ஸ் வீடியோவைப் பதிவு செய்துகொண்டிருந்தபோது, ​ திடீரென்று இசையை அணைத்தேன். ஓடும் நீரின் சத்தம் அர்த்தநாரீஸ்வர் அஷ்டகத்தை நினைவூட்டியது என்று குறிப்பிட்டுள்ளார். 

Aditi Rao Classical Dance Video Without Music

டெல்லி பிரசாத் இயக்கத்தில் உருவாகி வரும் துக்ளக் தர்பார் படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியுடன் நடிக்கவுள்ளார் அதிதி ராவ். அதனைத்தொடர்ந்து பிருந்தா இயக்கத்தில் உருவாகவிருக்கும் ஹே சினாமிகா படத்தில் துல்கர் சல்மானுடன் நடிக்கவுள்ளார்.