பள்ளி முதல் நாள் புகைப்படத்தை பகிர்ந்த நடிகை யாமி கௌதம் !

இந்திய திரையுலகில் அழகான ஹீரோயினாக வலம் வருபவர் நடிகை யாமி கௌதம். தமிழில் ராதாமோகன் இயக்கிய கௌரவம் படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் எனும் படத்தில் நடித்தார். ஹிந்தியில் பாலா படத்தில் நடித்திருந்தார்.

கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு நேரத்தில் மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரைப்பிரபலங்கள் பலரும் சமைப்பது, பாடல் பாடுவது, நடனமாடுவது, உடற்பயிற்சி செய்வது, பழைய புகைப்படங்களை பகிர்வது என சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் யாமி கௌதம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறிய வயது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அப்பதிவில், முதல்நாள் பள்ளி அனுபவம். அன்று என்ன நடந்தது என தெரியவில்லை, ஆனால் நான் மிகவும் ஆர்வமாக யூனிஃபார்ம் அனிந்து கொண்டேன், அம்மாவும் அப்பாவும் என்னை எங்கு கூட்டி செல்கிறார்கள் என்ற ஆவலோடு சென்றேனாம், இதே ஆர்வத்தோடு நான் எப்போதும் பள்ளிக்கு சென்றுள்ளேன் என்று பெற்றோர் சொல்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார் குறிப்பிட்டுள்ளார்.