நாடு முழுவதும் கொரோனா வைரஸ் குறித்த அச்சம் பரவி வருகிறது. இதையடுத்து இந்தியாவிலும் அது எதிரொலித்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் யாரையும் அவசியமில்லாமல் வெளியில் வர வேண்டாம் என போலீஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. திரைப்பிரபலங்கள் இதுகுறித்த விழிப்புணர்வு வீடியோக்கள் மற்றும் பதிவுகள் செய்து வருகின்றனர். 

Vidya

இந்நிலையில் நாயகி சீரியலில் நடித்து வரும் வித்யா ப்ரதீப், வீட்டில் இருக்கும் நேரத்தை உபயோகமாக செலவிட்டு வருகிறார். ஸ்டெம் செல் ஆராய்ச்சியை மேற்கொண்டு வரும் அவர் மீதமிருக்கும் பணிகளை முடிப்பதில் இறங்கியிருப்பதாக பதிவு செய்துள்ளார். நாயகி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவரை திரைப்படங்களிலும் கண்டிருக்கலாம். 

Vidya

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான பசங்க-2 மற்றும் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண்விஜய் நடித்த தடம் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.