குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்குள் அறிமுகமாகி , பின்னர் தெலுங்கு படங்களில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்து அசத்தியவர் ஸ்ரீ திவ்யா.சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் ஸ்ரீ திவ்யா.முதல் படத்திலேயே தமிழக மக்களின் மனம் கவர்ந்த நடிகையாக மாறினார் ஸ்ரீ திவ்யா.

அடுத்தாக ஜீவா,காக்கி சட்டை படங்களின் ஹீரோயினாக நடித்த இவர் ரசிகர்களின் பேராதரவை பெற்று தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக மாறினார் ஸ்ரீதிவ்யா.தொடர்ந்து ஈட்டி,பெங்களூர் நாட்கள்,மருது,காஷ்மோரா என்று அடுத்தடுத்து முக்கிய படங்களில் நடித்து அசத்தினார் ஸ்ரீதிவ்யா.

இவர் ஹீரோயினாக நடித்துள்ள ஒத்தைக்கு ஒத்தை படம் சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது.கடந்த சில வருடங்களாக சினிமாவில் தலைகாட்டாமல் இருக்கிறார் ஸ்ரீதிவ்யா இருந்தாலும் இவருக்கான ரசிகர் பட்டாளம் குறையாமலேயே உள்ளது.இவர் விரைவில் ஒரு படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது வரும் ஸ்ரீதிவ்யா தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன் ஒரு சீரியலில் நடித்துள்ளார்.thoorpu velle railu என்ற தெலுங்கு சீரியலில் ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார்.இந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.