சின்னத்திரை சீரியல்களில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சாந்தி வில்லயம்ஸ். தொலைக்காட்சி சீரியல்களான சித்தி,மெட்டி ஒலி, வாணி ராணி உட்பட பல சீரியல்களில் நடித்துள்ளார். மாந்தோப்பு கிளியே என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் உதயா, ஜோடி, டும் டும் டும், பாபநாசம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். 

இவரது கணவர் வில்லியம்ஸ் மலையாள சினிமாவில் பிரபல கேமரா மேன். இவர்களது திருமணம் 1974ல் நடைபெற்றது. மெட்டி ஒலி சீரியலில் நடித்துக்கொண்டிருந்த சமயத்தில் வில்லியம்ஸ் உடல் நிலை சரியில்லாமல் இறந்துவிட்டாராம். அப்போது சாந்தி வில்லியம்ஸ் தனது நான்கு குழந்தைகளையும் வளர்க்க மிகவும் சிரமப்பட்டுள்ளார். படங்களுக்காக நிறைய போராடியிருக்கிறார். அவர் வைத்திருந்த 1000 புடவைகளை விற்று குழந்தைகளை படிக்க வைத்தார் என்றெல்லாம் சினிமா வட்டாரத்தில் இருப்போர் கூறுவார்கள். அந்த அளவிற்கு வாழ்க்கையில் பல போராட்டங்களை கடந்து வந்தவர். 

இந்நிலையில் நடிகை சாந்தி வில்லியம்ஸின் மகன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த செய்தி திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகை சாந்தி வில்லியம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது நடித்து வருகிறார். இவர் மகனின் இழப்பிறகு இரங்கலை பதிவு செய்து வருகின்றனர் இவரது ரசிகர்கள். 

சமீப காலமாக பல திரைப்பிரபலங்களின் இறப்பு செய்தியை கேட்டு வருகிறோம். இன்று வரை இழப்புகள் அதிகமாகிக்கொண்டு தான் இருக்கிறது. 2020-ம் ஆண்டு எவ்வளவு மோசமாக உள்ளது என அனைத்து தரப்பினரும் கூறினர். சுஷாந்த் சிங், சிரஞ்சீவி, வடிவேல் பாலாஜி, சேதுராமன், எஸ்.பி.பி என பல அற்புதமான கலைஞர்களை இந்த 2020-ல் இழந்து தவித்து வருகின்றனர். 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது. முயற்சிகள் ஒருபுறம் இருக்க, வைரஸின் தாக்கம் வேகமாக இருக்கிறது. இந்த தொற்று காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. தினசரி செய்தி சேனல்களை ஆன் செய்தால் கொரோனா பற்றிய செய்திகள் தான் அதிகம். இது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. அனைத்து தரப்பினரும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக திரையுலகை சேர்ந்தவர்களும் தொடர்ந்து அறிவிப்பு வெளியிட்டு வருகிறார்கள்.

கொரோனா ஒருபுறமிருக்க, மாரடைப்பு மறுபுறம் வாட்டி வதைக்கிறது. வயது வித்தியாசம் பாராமல் இந்த மாரடைப்பு ஏற்பட்டு பலர் உயிரிழந்து வருவதை காண முடிகிறது. நல்ல செய்தி வரவில்லை என்றாலும் பரவாயில்லை, தொடர்ந்து இழப்பு செய்திகள் வருவதில் என்ன நியாயம் என்று புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.