விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் ரச்சிதா.இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் முடித்தார்.இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்.

ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு தனது கணவர் தினேஷுடன் இணைந்து ரச்சிதா நாச்சியார்புரம் என்ற தொடரில் நடித்தார்.ஜீ தமிழில் ஒளிபரப்பான இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.கொரோனா பாதிப்பை தொடர்ந்து ஒளிபரப்பான இந்த தொடர் சில காரணங்களால் விரைவில் முடிவுக்கு வந்தது.

மீண்டும் விஜய் டிவியில் ஹீரோயினாக தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்து வருகிறார்.இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ள ரச்சிதா நேற்று தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் லைவாக வந்து ரசிகர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

சித்ரா குறித்து பேசிய இவர் சித்ரா போன்ற ஒரு நபர் இப்படி முடிவெடுப்பார் என்று எதிர்பார்க்கவில்லை,இது குறித்து பேசினால் சிலர் விளம்பரம் என்பார்கள் அழுகை வந்தால் அதையும் ட்ராமா என்பார்கள் அதனால் இதனை தவிர்த்து வந்தேன்.நானும் சித்ராவும் ஒரே மாதிரி என்று பலரும் கூறினார் என்று சித்ரா குறித்த பல நினைவுகளையும்,மேலும் பெண்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுரைகளையும் அவர் தெரிவித்தார்.