தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொதுமக்களுக்கு தேவையான தடுப்பூசிகளை இறக்குமதி செய்துள்ள நிலையில் மக்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளும்படி அரசாங்கமும் மருத்துவர்களும் அறிவுறுத்தி வருகிறார்கள். 

இந்நிலையில் பல சினிமா பிரபலங்களும் தடுப்பூசி எடுத்துக்கோ எடுத்துக்கொண்டு அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு மக்கள் அனைவரையும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளும்படி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக  இருக்கும் தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா தடுப்பூசி எடுத்துக் கொண்டார். நடிகை நயன்தாராவுடன் இணைந்து இயக்குனர் விக்னேஷ் சிவனும் தடுப்பூசி எடுத்துக்கொண்டார். 

மக்கள் மத்தியில் சமீபத்தில் தடுப்பூசி காரணமாக பல  குழப்பங்கள் நிலவி வரும் நிலையில் இது போன்ற முன்னணி பிரபலங்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்  கொண்டு மக்களையும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துவது பலராலும் வெகுவாக பாராட்டப்படுகிறது. மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி முனெச்சரிக்கையாக இருப்போம்.எந்த பயமும் இன்றி தடுப்பூசியை எடுத்துக்கொள்வோம். கொரோனாவுக்கு எதிராகப் போராடுவோம்.