அமர காவியம் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மியா ஜார்ஜ். அதைத்தொடர்ந்து இன்று நேற்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து, எமன் போன்ற படங்களில் நடித்தார். தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் கோப்ரா திரைப்படத்தில் நடித்துள்ளார். 

Actress Mia George Gets Engaged To Ashwin Philip

இந்நிலையில் நடிகை மியா ஜார்ஜ் திருமண பந்தத்திற்குள் நுழைய உள்ளார். ஊரடங்குக்கு இடையில் அஸ்வின் பிலிப் என்ற இளைஞருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஸ்வின் பிலிப் - மியா ஜார்ஜ் நிச்சயதார்த்த நிகழ்வில் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. 

Actress Mia George Gets Engaged To Ashwin Philip

கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட இந்த லாக்டவுன் சூழலில் பலர் தங்கள் வீட்டிலேயே எளிமையான முறையில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். குறைவான எண்ணிக்கை கொண்டு சுப நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று அரசு அறிவித்தது.