மக்களின் மனதை திருடிய கதாநாயகிகளில் ஒருவர் நடிகை லைலா. கண் மூடிக்கொண்டு அவர் சிரிக்கும் சிரிப்பை ரசிகர்கள் மறக்க மாட்டார்கள். முதல்வன்,  தீனா, தில், நந்தா, உன்னை நினைத்து, மௌனம் பேசியதே, பிதாமகன் என பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். 

dheena

இந்நிலையில் நடிகை லைலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தல அஜித் குறித்து பதிவு செய்துள்ளார். அதில் 
தீனா பட நினைவுகள் குறித்து பேசியவர், எனக்கு மிகவும் பிடித்தமான படங்களில் ஒன்று. காதல் வெப்சைட் பாடல் குறித்து உங்கள் நினைவுகளை பகிருங்கள் என்று கேட்டுக்கொண்டார். மேலும் இந்த பாடலின் போது எனக்கு உடல் நிலை சரியில்லை. கடுமையான இருமல் மற்றும் காய்ச்சல் இருந்தது. ஆனால் நான் காட்டிக்கொள்ளவிரும்பவில்லை. பாடலில் உள்ள எனர்ஜி எனக்கு எனர்ஜி அளித்து டான்ஸ் ஆட வைத்தது என்று நினைவு கூர்ந்துள்ளார். 

Laila

நடிகை லைலா தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்காவிட்டாலும் அதே ஃபார்மில் உள்ளார். விரைவில் இவர் கம்பேக் தர வேண்டும் என்ற கமெண்ட் செய்து வருகின்றனர் திரை விரும்பிகள்.